Paadu Paappa
Nara Nachiappan
Kinder- und Jugendbücher / Kinderbücher bis 11 Jahre
Beschreibung
பாடு பாப்பா - நாரா. நாச்சியப்பன்
NURSERY RHYMES FOR CHILDREN 4-7 YEARS
நம் அருமைச் செல்லப் பிள்ளையைப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்புகிறோம். பள்ளிக்குச் சென்ற மறுநாளே தனியாக இருக்கும்போது அந்தப் பிள்ளை வாய்க்குள் சில பாடல்களை இசையோடு பாடுவதைக் காண்கிறோம். "எங்கே, பாடு!" என்று நாம் ஊக்கப்படுத்தினால், அது நடிப் போடு ஆசிரியை சொல்லிக் கொடுத்தபடி மழலை மொழியில் பாடிக்காட்டும்போது பெற்றவர் உள்ளமெல்லாம் களி கொள் ளுகின்றது; துள்ளி மகிழ்கின்றது.
"இரண்டே நாளில் என் கண்மணி எவ்வளவு கற்றுக் கொண்டு விட்டது" என்று பெருமைப்படுகின்றோம்.
தற்போது பள்ளிக்கூடங்களில் ஆங்கில மழலைப் பாடல்களையே சொல்லிக் கொடுக்கிறார்கள். விடுதலை பெற்ற நமது நாட்டில் இன்னும் ஆங்கில மொழி மோகமும் ஆதிக்கமும் இருப்பது நாட்டுப் பற்றாளர்களுக்கு வேதனை தருவதாகும். இந்நிலை மாற வேண்டும்.
நமது தமிழ்க் கண்மணிகள் தமிழில் மழலை பாடல்கள் பாடுவதே தமிழ்ப் பெற்றோருக்குத் தலையாய் இன்பத்தைத் தர வல்லதாகும்.
Kundenbewertungen
Tamil Novels, Tamil Children songs, Tamil Books, Tamil Children Stories