Inba Vazhvu
Thiru. V. Kalyanasundaram
* Affiliatelinks/Werbelinks
Links auf reinlesen.de sind sogenannte Affiliate-Links. Wenn du auf so einen Affiliate-Link klickst und über diesen Link einkaufst, bekommt reinlesen.de von dem betreffenden Online-Shop oder Anbieter eine Provision. Für dich verändert sich der Preis nicht.
Sachbuch / Philosophie, Religion
Beschreibung
இன்பவாழ்வு - திரு.வி. கலியாணசுந்தரனார்
'இயற்கை வாழ்வே இன்ப வாழ்வு' என்பது பழந் தமிழர் கொள்கை. அன்னார் இயற்கையோடு கலந்த இன்ப வாழ்வை நடத்தினவர் என்பதைப் பண்டைத் தமிழ் நூல்களில் இன்னுங் காணலாம்.
இடைக்காலத்தில் பழந்தமிழர் கொள்கை வீழ்த்தப்பட்டது. அன்று தொட்டு நாடு உரிமையுணர்விழந்து வறுமைக்கும் பிணிக்கும் இரையாகி நரகத்துன்பத்தில் வீழ்ந்து கிடக்கிறது. மீண்டுந் தமிழ்நாடு பழைய நிலையெய்த வேண்டுமாயின், அஃது இயற்கை வாழ்வில் பழையபடி தலைப்படல் வேண்டும்.
இக்கொள்கையை ஒல்லும்வகை பல வழியிலும் பரப்ப வேண்டுமென்பது எனது விருப்பம். இவ்வுணர்வு தோன்றிய நாள்தொட்டு யான் எம்மேடைமீது பேசினும் எந்நூலெழுதினும் இக் கொள்கையை எம்மூலையிலாவது வலியுறுத்துவது வழக்கம்.
எனது "நவசக்தி" பத்திரிகையிலும் இயற்கை வாழ்வைப்பற்றிப் பன்முறை எழுதியிருக்கிறேன். அவ்வாறு எழுதப்பெற்ற கட்டுரைகளுள் "இன்பவாழ்வு என்னும் இக்கட்டுரையுமொன்று.
இக்கட்டுரையைச் சிறு நூல் வடிவாக்கி வெளியிட வேண்டுமென்று விரும்பிக் கொப்பனாப்பட்டி விவேகாநந்த வாசகசாலையார் கடிதம் எழுதினர். அவர் விருப்பத் துக்கிணங்கி 'இன்ப வாழ்வு' என்னும் இக்கட்டுரையை அவர் வெளியிட இசைந்தேன்.
Kundenbewertungen
Tamil Books, Ponniyin Selvan, Tamil Novels, Hinduism Books, Kalki Books