நீயில்லாமல் நானும் நானல்ல...
ஆர்.மகேஸ்வரி
Belletristik/Erzählende Literatur
Beschreibung
வானம் இருட்டத் தொடங்கியது.
காலடி ஓசை கேட்டு... தன்னை இயல்பு நிலைக்கு மாற்றிக் கொண்டு திரும்பிப் பார்த்தான். கணேஷ், ராஜா, திலீப்... எனத் தனது நண்பர்கள் பட்டாளம். அவர்கள் தன்னை வம்புக்கு இழுத்து எவ்வாறு கதறடிக்கப் போகின்றனரோ எனப் பயந்தான்
“டேய் அரவிந்தா... படிக்கறே காலத்தில் பெண்கள் பக்கமே திரும்பக்கூட மாட்டே! சாமியாராச்சே...” ராஜா முடிப்பதற்குள்.
“சாமியார்தான்! இப்போ சம்சாரியாகப் போறார்!”
திலீப் அபிநயித்துச் சொல்ல... அத்தனை பேரும் கைத்தட்டிச் சிரித்தனர். தன் கவலையை மறந்து அரவிந்தனும் சிரித்து விட்டான்.
“பெண்களைப் பற்றி பேசினாலே முகம் சுளிப்பே! காதைப் பொத்திக்குவே... ம்ம்... இப்போது என்னடாவென்றால் எங்களுக்கு முன்னாடியே மேரேஜா?” சொல்லி விட்டு நக்கலாய் தலையசைத்தான் கணேஷ்.
“சரி அதெல்லாம் போகட்டும் விடுங்கடா. ஆமாம் அரவிந்த்... எத்தனை குழந்தைகள் பெத்துக்குவீங்க?” திலீப் சிரிக்காமல்... சீரியசாய் கேட்க... அரவிந்தனுக்கு இருந்த மனநிலையில் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“ஒன்றா...? இரண்டா...?” மேலும் அவனை வம்புக்கு இழுக்க.
“டஜன் தான். கேக்கறான் பாரு கேள்வி!” அரவிந்தன் சீறினான்.
“என்னடா மச்சி... சில்ரன்ஸ் பார்க் வைக்கப் போறீயா?”
“ஆச்சர்யமா இருக்கே! அமுல் பேபி அரவிந்தனா இப்படியெல்லாம் பேசுவது!”
“விரல் சூப்பி பையனா இருந்தவன் எப்போடா மாறினே? ம்ம்... எங்களுக்கெல்லாம் பொறாமையா இருக்கே!”
“அண்ணியோட அழகுல விழுந்தவன் இன்னும் எந்திரிக்கவே இல்லையா...? இப்ப புரியுது... நீ அண்ணி கிட்ட எவ்வளவு மயங்கி கிடக்கேன்னு!”
“நீ சொல்வது நூறு சதவீதம் சரிதான் மாமா” இப்படி ஆளாளுக்கு கிண்டலடிக்க...
அரவிந்தன் தொய்ந்து போய் விட்டான்.
“ச்சே! என்னடா இது? என் நிலைமை புரியாம... உங்க திருவாயை மூடுங்கடா!” அரவிந்தன் கையெடுத்துக் கும்பிட்டான்.
திலீப் கேட்டான். “முக்கியமா ஒண்ணை மறந்து விட்டோம். ஆமா லவ்வா...?”
“டேய்... டேய்... போதும்டா சாமிகளா! இதுக்கும் மேலே என்னால் தாங்க முடியாது... போங்கடா... அங்கே போய் நம்ம பிரண்ட்ஸை என் சார்பா இன்வைட் பண்ணுங்க... என்னை கொஞ்சம் தனியே விடுங்கடா... ப்ளீஸ்...” அப்பாவியாய் அவன் கெஞ்ச...
அப்போது அங்கே கௌசல்யா வேகமாய் வந்தாள். அரவிந்தனைப் பார்த்து தலையசைத்து அருகே அழைத்தாள். மகா மட்டமாய் கண்ணை சிமிட்டி வேறு கவர்ச்சியாய் சிரித்தாள்.
பதறிப்போனான். அவள் செய்கையால் வெட்கிப் போனான். 'என்ன மாதிரிப் பெண் இவள்!
நான்கு பேர் இருக்கிறார்களே... அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று துளிகூட இல்லையா! இந்த லட்சணத்தில் அவளோடு எப்படித்தான் குடும்பம் நடத்துவதோ!' இப்படி அரவிந்தன் நினைக்கும்போதே நெஞ்சில் நெருஞ்சியை வைத்து தேய்த்தது போல இருந்தது.”
“ஒன்மினிட் ப்ரண்ட்ஸ்” என்று அவன் அவளின் அருகில் ஓட... “கல்யாணத்துக்கு முன்பே ஒரு கண்ணசைவுக்கு இப்படி சிட்டாய் பறப்பவன் முடிஞ்சா இன்னும் என்ன கூத்தெல்லாம் செய்வானோ!” என்று நண்பர்கள் நக்கலடித்துக் கொண்டு சென்றது அரவிந்தனின் காதில் விழுந்தது.
கௌசல்யாவின் அதீத அலங்காரமும்... கண்ணைப் பறிக்கும் லிப்டிக்கும் ஏனோ அவனுக்கு அசிங்கமாய் தெரிந்தது.
கல்லூரி நாட்களில் நண்பர்களிடம் பெண்களைப் பற்றி வாதிட்டது ஞாபகத்தில் மின்னியது
Kundenbewertungen
Kudumba Novel, drama, romance, R.Maheswari, relationship, family stories, contemporary fiction